பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துபூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் அன்றி, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment