tamilnaadi 3 scaled
இலங்கைசெய்திகள்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 02 August 2024

Share

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 02 August 2024

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஆகஸ்ட் 2, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். விருச்சிக ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 2, 2024, குரோதி வருடம் ஆடி 17 வெள்ளிக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் கண்டு எதிரிகள் கூட பொறாமைப்படுவார்கள். உங்களின் வேலையில் கவனம் செலுத்தி செயல்படவும். இன்று மன அமைதி கிடைக்கும். பணிச் சுமை குறையும். உங்கள் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் பெறலாம். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மனதில் திருப்தி ஏற்படும். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பு உயரம். இன்று வண்டி, வாகன பயன்படுத்துவதில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டு தொழில், வியாபாரம் செய்யக் கூடியவர்கள் சாதகமான நாள். கடன் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்களின் கௌரவம், மரியாதை உயரும். பதிவு உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முக்கிய விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உயர்வு கிடைக்கும். உங்களின் விருப்பங்களும் நிறைவேறும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் சிரமங்கள் இருந்தாலும் வெற்றி அடைய முடியும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உங்களின் வியாபாரம், வேலையில் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று சாதமற்ற சூழ்நிலையில் உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த நிதானமாக நடந்து கொள்ளவும். மாலை நேரத்தில் திடீர் பணம் ஆதாயம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் போட்டி, படிப்பில் நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். புதிய வருமான ஆதாயங்கள் பெறலாம். இன்று அதிகமான அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியம் மோசம் அடையும். வெளியூர், வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக் கூடியவர்கள் நல்ல செய்தியை பெறலாம். குழந்தைகளின் திருமணம் தொடர்பான விஷயங்கள் நிதானம் தேவை.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் நிதிநிலை பலப்படும். இன்று அன்பானவர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் அத்தியாவசியமான பொருட்கள் வாங்கும் விஷயத்தில் அதிக பணம் செலவிடுவீர்கள். இன்று எந்த ஒரு பெரிய பணப்பதிவுதனைகளையும் செய்வதைத் தவிர்க்கவும். இன்று எதிரிகள் பலமாக தோன்றுவார்கள். அதனால் உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செய்து முடிக்கும் முயற்சிக்கவும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, வியாபாரம் என எதிலும் நீங்கள் விரும்பிய பலன் கிடைக்கும். நண்பர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். மாணவர்கள் போட்டி, படிப்பில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். நிதிநிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக அனைத்து அம்சங்களையும் சரி பார்க்கவும். இன்று உங்களின் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும். இல்லையெனில் நிதி நிலையில் கவலை சந்திக்க நேரிடும். உங்கள் முடிவுகளுக்கு வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் நினைத்து எல்லா வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்குச் சாதகமான நாளாக அமையும். இன்று முதலீடுகள் செய்ய உகந்த நாளாக இருக்கும். முக்கிய நேரத்தில் பெற்றோரின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...