tamilnaadi 1 scaled
இலங்கைசெய்திகள்

Daily Horoscope : இன்றைய ராசிபலன் : 17 செப்டம்பர் 2024

Share

Daily Horoscope : இன்றைய ராசிபலன் : 17 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் 17.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 1, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பகுதி அமைதியற்றதாகவும், குழப்பமாகவும் இருக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதனால் அவசரப்பட்டு எதையும் பேசுவது, முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அவசரத்தால் பண விரயம் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மாலையில் ஓரளவு சாதகமான சூழல் இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். பணியிடத்தில் இல்லாத சூழல் இருந்தாலும், உங்கள் வேலையை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். சிலருக்கு பண வரவு தடைப்படும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வேலையை பொறுமையுடனும், விவேகத்துடன் செய்து முடிக்கவும். இன்று உங்களுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட மன திருப்தி குறைவாக கிடைக்கும். உங்களின் சௌகரியங்கள் மற்றும் ஆடம்பரத்திற்காக அதிக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு வயது தொடர்பான உபாதைகள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் சுயநலம் அதிகரிக்கும். மன அமைதியற்ற நிலை இருக்கும். பிள்ளைகளின் செயல் மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் கடின உழைப்பு தேவைப்படும். நேர்மறையான சிந்தனை உடன் செயல்படவும். பெண்களின் செயல்பாடு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இன்று கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனக் குறைவு வேண்டாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஒழுக்கக்கேடான விஷயத்தில் ஈடுபட வேண்டாம். இன்று தேவையற்ற தகராறுகள், அவதூறுகள் ஏற்படும். உங்கள் வேலையில் அதிருப்தி ஏற்படும். குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாள். உங்கள் வேலைகளைச் சரியான நெறிமுறையில் செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று மாலை நேரத்தில் திடீர் பண ஆதாயம் உற்சாகத்தை அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்காது. தம்பதிகள் இடையே சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும். இதற்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்கவும். எந்த விஷயத்திலும் நேர்மையாக நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பச் சூழல் குழப்பத்தைத் தரும். உங்கள் வேலையில் சோம்பேறித்தனமாகச் செயல்பட வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை பளு அதிகமாக இருக்கும். இன்று சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்களின் புதிய திட்டங்கள் சிறப்பான வெற்றியை தரும். குடும்ப உறுப்பினர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் பிடிவாதத்தால் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. நிதி ரீதியான மிதமான நாளாக அமையும். உத்தியோகஸ்தர்கள் வேலையை சரியாக முடிப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் அனைத்து வேலைகளையும் சீராக செய்து முடிப்பீர்கள். பண ஆதாயம் பெறுவீர்கள். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்வதைத் தவிர்க்கவும். உங்களின் பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் திடீர் உடல் நலக்குறைவு கவலையை தரும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மங்களகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் செயலில் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை நிறுத்தவும். அதனால் தேவையற்ற நஷ்டம் ஏற்படும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். இன்று புதிய ஒப்பந்தங்கள் விஷயத்தில் கவனம் தேவை.. ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...