பாண் வாங்குவதற்கு, வண்டியில் பணத்தை ஏற்றிச் செல்லும் நிலை நாட்டில் ஏற்படும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பணத்தை அச்சடித்து விநியோகிப்பதன் மூலம் நாட்டின் டொலர் பிரச்சினையையோ, பொருளாதார பிரச்சினையையோ தீர்க்க முடியாது என்பதை அரசாங்கத் தின் பொருளியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அரசாங்கத்தின் இவ்வாறான முடிவுகளால், நாளை அல்லது நாளை மறுதினம் பாண் வாங்குவதற்கு, வண்டியில் பணத்தை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
#SrilankaNews