நாட்டை மீட்கும் பயணத்தில் கூட்டமைப்பும் இணைய வேண்டும்! – சம்பிக்க அழைப்பு

patali champika ranawaka

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லவர்கள் உள்ளனர். நாட்டை மீட்பதற்கான பயணத்தில் அவர்களும் இணைய வேண்டும்” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது. ஜுலை முதல் வாரமளவில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால், அதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீராது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் நகர்வுகள் தோல்வி அடைந்தால், நாட்டை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நாம் தயார்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளில் நல்லவர்கள் உள்ளனர். அவர்களும் நாட்டை மீட்பதற்கான பயணத்தில் இணைய வேண்டும். நபர்கள் முக்கியம் அல்ல. நாடுதான் முக்கியம்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version