அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அவர் கூட்டமைப்பின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம் கூடவுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி.
” ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும். எனினும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்க வேண்டும்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.” – என்று கூறினார்.
#SriLankaNews