முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன.
நேற்றைய தினம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
அத்துடன், முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment