பொலனறுவை – மட்டக்களப்பு வீதியில், மனம்பிட்டிய பிரதேசத்தில் கொடலிய பாலத்துக்கு அருகில் பஸ்ஸுடன் ஓட்டோ மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோவில் பயணித்த அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 62 வயதுடைய வயோதிபத் தம்பதியினரும், 72 வயதுடைய உறவினருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மூவரும் ஓட்டோவில் அரலகங்வில – அருணபுர பகுதியிலிருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த ஓட்டோ பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment