Murder Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குற்றங்களைச் செய்துவிட்டு இந்தியாவுக்குச் தப்பிச் சென்ற மூவர் உடனடியாக நாடு கடத்தல்!

Share

இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்துக்குச் சென்றனர்.

மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்டனர்.

இதனையடுத்து தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டனர்.

இவர்கள் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலும் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் மேற்படி மூவரும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...