24 66455403985ee
இலங்கைசெய்திகள்

நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய்

Share

நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய்

ஹபரணை – புவக்பிட்டிய பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த தாய்க்கு 03 வயதுடைய மற்றுமொரு மகள் இருப்பதாகவும், இதற்கு முன்னர் இரண்டு இரட்டை மகன்கள் பிறந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய கிஹானி சுபேஷலா குமாரி என்ற தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தையான சஞ்சித் அசோக தயானந்தா விசேட தேவையுடையவராவார்.

தம்புள்ளையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமத்தில் நீர், மின்சாரம்,வீடு போன்ற அடிப்படை வசதிகளின்றி இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...