19 ஆயிரம் லீற்றர் டீசலுடன் மூவர் கைது!

image 5002d73377

கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்களை கொண்டு செல்லும் பாணியில், இரு கனரக வாகனங்களில், தண்ணீர் கொல்களன்களின் டீசலை சேகரித்தே டீசல் கடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை நோக்கி செல்லும் வழியிலேயே வாகனங்கள், சுற்றிவளைக்கப்பட்டு கைதும், கைப்பற்றலும் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட டீசலின் பெறுமதி 80 லட்சம் ரூபாவுக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே தடவையில் அதிகளவு டீசல் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

#SriLankaNews

Exit mobile version