202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருட்களுடன் நெல்லியடியில் மூவர் கைது!

Share

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும் பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...