மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சட்டவிரோதமாக காணி ஒன்றை துப்பரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றை துப்பரவு செய்தமை தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 58,63 மற்றும் 65 வயதுடையவர்களாவார்.
சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment