12 25
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

Share

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள மொத்தக்குடும்பங்களில் கால்பங்கு குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் மற்றும் முறையற்ற பொருளாதார நிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலும், ஜனநாயக மறுசீரமைப்புக்களும் இன்னமும் பெருமளவுக்குப் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பங்காளிகளுக்கு காண்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...