sumanthiran
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல்! – சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

Share

புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.

இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட ep bey 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது. இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார்.

இந்த நேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.

புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியினையும் நான் முன்வைக்கின்றேன்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#srilankanews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...