Journalist 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுயாதீன ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

Share

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளர் சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரதமர் அலுவலகத்தினால், மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடாத்துமாறு யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட பொலிசாருக்கு ஊடகவியலாளரான சகோதரன் சாட்சியம் வழங்கியுள்ளார்.

நேற்று இரவு அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் தன்னை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...

images 10
செய்திகள்இலங்கை

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு...

PowerCut 1200px 22 11 28 1000x600 1
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலை: மின் விநியோக மார்க்கம் பாதிப்பால் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை...

25 67efbc96a90dc
செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (நவம்பர் 27) காலை கொழும்பில் உள்ள ஒரு தனியார்...