தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
அதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது.
அதன் போதும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர்.
ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதம். இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை முக்கியமாக பெற்ற தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆகும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு ஒரே திசையில் நேர்படும் நாட்கள் தந்தை வழி முன்னோர்களை நினைந்து வழிபட ஏற்ற நாட்களாக அமாவாசை நாள் இந்த ஆடி அமாவாசை திகழ் கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment