arrest handdd
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டோர் கைது!

Share

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் உள்பட கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர்.

கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபர் ஒருவரும் அவருக்கு உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளில் பகல் வேளைகளில் உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் 1அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில கைப்பற்றப்பட்டதுடன் நகைக்கடை உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்து உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இலங்கைஏனையவைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...

images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது....

25 694be11238450
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி காணி மக்களின் காணி மக்களிடமே வழங்கப்பட வேண்டும் – நாக விகாரை விஹாராதிபதி வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதை ஏற்றுக்கொண்ட யாழ். நாக...

Untitled 62 1
செய்திகள்இலங்கை

குடிபோதையில் கடமையாற்றிய CTB நடத்துநர்: பயணிகளின் முறைப்பாட்டால் அதிரடி இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநர் ஒருவர், பயணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து...