தற்போதைய அரசிடம் கூட்டுப் பொறுப்பு என்பது சற்றும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
இந்த அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்களே தவிர தமது பொறுப்பை உணரவில்லை.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில், மின்சக்தி அமைச்சர் எரிசக்தி அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.
எரிசக்தி அமைச்சரால் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலையில், அவர் மின்வலு அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.
இருவரும் தமது பணிகளை சரியாக செய்யாது, மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் செலுத்துகின்றனர். நாயின் வேலையை கழுதை செய்வதாகவும், கழுதையின் வேலையை நாய் செய்வதாகவுமே இதனை கருத வேண்டும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment