தற்போதைய தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் தாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்பது மக்களுக்கும் தெரியும் எனவும் அவர்கள் மீது அதிக கரிசனை கொண்டவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னேற்றுவது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது என்பனவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், காாணமல் போனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த அரசாங்கம் தீர்வுகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி புதைகுழி தொடர்பாக ஜனநாயக ரீதியாக பேசுவதற்கும் அவற்றை அகழ்வவதற்கும் இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சனைகளை உண்மையாக பேசுவது எமது அரசாங்கமே எமது அரசாங்கத்தில் வாய் பேச்சு வீரர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சனைகளை இதயங்களின் இருப்பாகக் கொண்டு தீர்வு வழங்க அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.