tamilni 259 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் திருமந்திர ஆன்மீக மாநாடு

Share

யாழ்ப்பாணத்தில் திருமந்திர ஆன்மீக மாநாடு

திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று(21.10.2023)யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘அகில இலங்கை சைவமகாசபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை இணைந்து ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30மணிமுதல் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டிற்காக 50 திருமந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் அறநெறி மாணவர்களிடையே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சைவத்தமிழர்களது வாழ்வியலுடன் இணைந்ததாக திருமந்திரம் காணப்படுகின்றது.ஆகவே திருமந்திரம் அடுத்த சந்ததிக்கு கடத்தபடவேண்டும்.

இதனை மையமாக கொண்டு வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் மாணவர்களிடையே நிகழ்நிலைரீதியாக திருமந்திர போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

இதே வேளை எதிர்வரும் வாரத்தினை திருமந்திர வாரமாகவும் அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை பிரகடனப்படுத்தியுள்ளது.இந்த வாரத்தில் திருமூலரது திருமந்திரத்தினை அறிதல் பிறருக்கு தெளிவூட்டுதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கபடவேண்டும்.

எந்தவொரு விடயமும் முன்னெடுக்கப்படவேண்டுமாயின் கல்வி சமூகம் கை கொடுக்க வேண்டும் அதனடிப்படையில் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை , பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட யாழ் பல்கலைக்கழகம் அது உருவாக்கப்பட்டதன் நோக்கினை இந்த திருமந்திர மாநாட்டின் மூலம் தொடர்ச்சியான ஒரு நிலையை பேசுகின்றது.

இதற்காக பல்கலைக்கழகத்திற்கும் சைவமகா சபை நன்றியை தெரிவிக்கின்றது.

மேலும் வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் பல சைவ நிறுவனங்கள் இதற்கான ஆன்மீக விழிப்புணர்வு மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியுள்ளன.சாதாரண கிராமம் முதல் அனைத்து இடங்களிலும் இந்த திருமந்திர மாநாடு சென்றடைய வேண்டும். குறித்த மாநாட்டில் திருமந்திர மாநாட்டு மலர் ஒன்று வெளியீடு செய்துவைக்கபடவுள்ளது.

இந்தியாவிலிருந்து ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி அருணை பாலறாவாயனும் இதற்காக கலந்துகொள்ளவுள்ளார்.காலை மற்றும் மாலை என இருபகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மநாட்டில் வருகை தருபவர்களுக்கும் மதிய போசனம் தயார்படுத்தபட்டுள்ளது.

குறித்த முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக சிவசிறீ சரவேஸ்வர ஐயர் பத்மநாதன் இந்து கற்கைகள் பீட பீடாதிபதி யாழ் பல்கலைக்கழககம்,செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன்,திருமிகு கிருஷ்ணபிள்ளை குணநாயகம் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர்,கௌரவ விருந்தினர்களாக கலாநிதி சுகத்தினி திரு முரளிதரன் இந்து நாகரீகதுறை தலைவர் யாழ் பல்கலைக்கழககம்,திருமிகு நாகையா வாமன் தலைவர் இந்து நாகரீகதுறை கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்,தென்கையிலை ஆதீனம் ,மெய்கண்டார் ஆதீனம்,தருமை ஆதீன கிளைமடம் திருக்கேதீச்சரம், திருநாவுக்கரசர் ஆதீனம் நுவரெலியா,சிவகுரு ஆதினம் நல்லூர் ஆகியவற்றின் குரு முதல்வரும் பங்குபற்றவுள்ளனர்.

ஆகவே குறித்த மாநாட்டிற்காக அனைத்து தரப்புக்களும் எம்முடன் இணைந்து பணியாற்றி திருமந்திரத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துவோம்‘‘என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...