திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடிச்சீலை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
1982ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை வழங்கப்பட்டநிலையில் யுத்த காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் திருக்கேதீஸ்வரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Leave a comment