யாழ்ப்பாணம்- சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத மர்ம நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு இளைஞர்கள் குடும்பப்பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது 3 3/4 சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணியின் கைகளிலும் அகப்பட்டடது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment