கம்பளை பகுதியில் இருந்த ATM இயந்திரத்தை தூக்கிக்கொண்டு முகமூடி அணிந்த திருடர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் சந்தேக நபர்கள் நால்வர் ATM இயந்திரத்தை முழுமையாக அகற்றி அங்கிருந்து கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வேனில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், அங்கு பணியில் இருந்த காவலாளியை கட்டி போட்டுள்ளனர்.
பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை அகற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன், பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment