கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் இரகசியமாக எதுவும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘யுகதனவி உடன்படிக்கை நாட்டுக்கு தேவையான ஒன்று. முதலீட்டாளர்கள் எமது நாட்டுக்கு வருவதில்லை என விமர்சிக்கின்றனர்.
அவ்வாறு வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன்மூலம் எதிரணியின் பொறாமை அரசியல் தென்படுகின்றது.
யுகதனவி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பொறுப்புக்கூறும் என்பதால் உள்ளடக்கங்கள் பற்றி நான் ஆராயவில்லை. அமைச்சரவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.” என்றார்.
#SrilankaNews
Leave a comment