கோட்டா மஹிந்த பஸில்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா – மஹிந்த இடையே விரிசல் இல்லை! – ஊடகங்கள் மீது பஸில் பாய்ச்சல்

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.”

– இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.

ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை. எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்; நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...