25 13
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் முடிவில் மாற்றம் தேவை : அநுர தரப்பு தெரிவிப்பு

Share

தமிழரசுக் கட்சியின் முடிவில் மாற்றம் தேவை : அநுர தரப்பு தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணத்தில் தமிழரசுக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருப்பது மன வருத்தைத் தரும் விடயமாகும்.

இது குறித்து அக்கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது சில மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற் குழு உறுப்பினர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் விடுத்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்குத் தீர்மானித்து இருக்கின்றார்கள்.

அவ்வாறே அக்கட்சியினர் மக்களிடத்தில் கோரிக்கையினையும் விடுத்துள்ளனர்.தேசிய மக்கள் சக்தி அந்த நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

தேசிய மக்கள் சக்தியானது இன்று முழு நாட்டிலும் அதாவது வடக்கு, கிழக்கு, மலையகம் , தென்னிலங்கை மக்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுகின்ற புதிய ஜனநாயக அரசியல் பாதையை வேண்டி நிற்கின்றது.

இலங்கைக்கு ஒரு புதிய சுதந்திரத்தை வேண்டி நிற்கின்ற இந்த வேளையில் தமிழரசுக் கட்சியின் இந்த தீர்மானம் மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலே சில மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.அல்லது அவர்கள் தங்களுடைய தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஊட்டுவதாகவே காணப்படுகின்றது.ஆனால் வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள்; இலங்கையிலுள்ள சகலவிதமான அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கும் ஒரு புதிய தீர்வை அணுகுவதற்காக, ஒரு புதிய சுதந்திரத்தை அணுகுவதற்காக, அவர்கள் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றார்கள்.ஒரு மறுமலர்ச்சியை வேண்டி நிற்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் இன்று இந்த நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே.

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயகவின் தெரிவிலே தான் இந்த நாட்டுக்கு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...