கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கோத்தாபாய– மஹிந்த ராஜபக்ச ஆகியோரை ஆட்சிக்குக் கொண்டு முக்கிய காரணமாக இருந்தவர் ஆனந்த தேரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது இவர் அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment