IMG 20220528 WA0088
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெல்லியடியில் திருட்டு! – இருவர் கைது

Share

நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐ போன் ஒன்றும் ஐ பாட் ஒன்றும் 6 கிராம் எடையுடைய தோடுகளும் 35 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...