குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் அச்சமடைந்த யுவதி ஒருவர் வீட்டில் 02வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி மொனராகலையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது, பதுஹேன பிரதேசத்திலுள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews

