கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்ணாலைக் கட்டுவன் பகுதியல சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நவக்கிரி பகுதியில் வைத்து ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment