Murder new 444
இலங்கைசெய்திகள்

திருவலையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! – அரியாலையில் சம்பவம்

Share

கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த குடும்பப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடலில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்ட 5 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...