கொரோனாத் தொற்றுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 97 சதவீதம பாதுகாக்கப்படுகின்றார் என்று இந்திய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்திய அரசின் கொரோனாத் தடுப்பு தொழில்நுட்பக் குழுவால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனாத் தொற்று நோயாக காணப்பட்டாலும், அதற்கான தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொள்வதன் மூலமாக, தொற்றால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் .
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று மற்றும் இறப்புகள் தொடர்பான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வறிக்கையின்படி. முதலாவது தடுப்பூசி செலுத்திய ஒருவர் மரணத்திலிருந்து 96 சதவீதம் பாதுகாக்கப்படுவதுடன், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் 97 சதவீதம் மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றார் – என்றுள்ளது.
Leave a comment