strike
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளைய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க குழுவும் ஆதரவு!

Share

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இது தோரார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், எமது நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகளைக் கண்டித்தும் அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் நாளை 28.04.2022 வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அந்த வகையில் எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருக்கின்றது.

பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல கல்விசாரா பணியாளர்களையும் இப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 28.04.2022 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய அனைத்து பணியாளர்களையும் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும், தொடர்ந்து இடம்பெறும் விளக்கப் பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதோடு, வவுனியா பல்கலைக்கழக பணியாளர்களை பம்பைமடு வளாகத்தில் ஒன்றுகூடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை, நாளை 28.04.2022, காலை 11 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் அடையாள எதிர்ப்பு போராட்டமும் இடம்பெறும். – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...