சிறுவர் இல்லத்தில் இருந்த இரு சிறுமிகள் மாயம்!
கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (20) ஆம் திகதி 4.30 மணிமுதல் குறித்த இரு சிறுமிகளும் சிறுவர் இல்லத்தில் காணப்படவில்லையென பொறுப்பாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுடாக குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 10 நாட்களின் பின்னர் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து மேற்படி சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#srilankNews
Leave a comment