thief 4 092713
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமையலறைக்குள் புகுந்த திருடன் சம்பலையும் சோற்றையும் சாப்பிட்டு தப்பி ஓட்டம்!

Share

தாயும், மகளும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சமையலறைக்குள் புகுந்த நபரொருவர் சோற்றுப் பானையில் எஞ்சி இருந்த சோற்றையும் சீனி சம்பலையும் சாப்பிட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

கேகாலை, தேவாலேகம, கெசல்வத்துகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வீட்டுக்காரப் பெண் தனது காணியில் வீடு ஒன்றை நிர்மாணித்த பின்னர் எஞ்சிய தென்னம் பலகைகளை குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் குவித்து வைத்திருந்துள்ளார்.

12 ஆம் திகதி இரவு குவித்து வைக்கப்பட்டிருந்த பலகைகளில் 10 பலகைகளை யாரோ திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரான பெண் 13 ஆம் திகதி தேவாலகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

13 ஆம் திகதி இரவு தாயும் மகளும் சீனி சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை காலை சாப்பிடவென வைத்துள்ளனர்.

சாப்பிட்ட பின்னர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக சமையலறைக்குள் புகுந்த திருடன் எஞ்சிய சம்பலையும் சோற்றையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...