1093c9c4 e424bca4 pta
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை உடனடியாக வெளியிட பணிப்பு!

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை உடனடியாக வெளியிடுமாறு இலங்கை பொலீஸ் திணைக்களத்துக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளது. கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையின் முடிவில் வெளியிடப்பட்ட தீர்ப்பிலேயே இவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் (2021) நவம்பர் 20 ஆம் திகதி இலங்கை பொலீஸ் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் 01.01.2019 முதல் 20.11.2021 வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் விரிவாகக் கோரப்பட்டிருந்தன. அவரது கோரிக்கைக்கு அமையத் தகவல்களை வழங்க முடியாது என பொலீஸ் திணைக்களத் தகவல் அதிகாரி நவம்பர் 27ஆம் திகதி பதிலளித்ததைத் தொடர்ந்து, தகவல் கோரியவர் பொலிஸ் திணைக்களத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்தார்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும், தகவல் அதிகாரியின் பதிலுடன் முன்னுக்குப்பின் முரண்படும் வகையில் “தகவல் வழங்க முடியாது” என 2022 ஜனவரி 22 இல் பதிலளித்துள்ளார். இரு தரப்பிடமிருந்தும் தனக்குக் கிடைத்த பதில்களில் அதிருப்தி அடைந்த தகவல் கோரிய சுரேன் டி பெரேரா தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் 2022 மார்ச் 08 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீடு மீதான விசாரணைகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகினி வல்கம மற்றும் ஆணைக்குழுவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கிசாலி பின்தோ ஜெயவர்த்தன, ஜகத் லியன ஆராச்சி ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணை மீதான தீர்ப்பு கடந்த 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்மானப்படி, பொலீஸ் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் கோரப்பட்ட அனைத்துத் தகவல்களையும் எதிர்வரும் ஒக்ரோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என்றும் இலங்கைப் பொலீஸ் திணைக்களம் ஆணைக்குழுவின் தீர்ப்புக்கமையச் செயற்படத் தவறும் பட்சத்தில், பொலீஸ் திணைக்களத்துக்கு எதிராகவும், அதன் தகவல் அலுவலருக்கு எதிராகவும் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும், அவர்கள் விடுவிக்கப்பட்ட பின் சமூக மயப்படுத்தப்படுதல் தொடர்பிலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது ஆழ்ந்த கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...