சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு கூடியது.
இதன்போது சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டன.
ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் ஐக்கிய மக்கள் கூட்டணியாக பங்கேற்பதற்கும், ஜனாதிபதியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் தனித்து பேச்சு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment