வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment