மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடிச் சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
மழை பெய்துகொண்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், குடை பிடித்தவாறு பயணித்துள்ளார்.
அதன்போது. திடீரென வீசிய காற்றினால், குடையுடன் மோட்டார் சைக்கிளில் ஓட்டி , நிலை தடுமாறி எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துச்சம்பவம் பதிவாகியுள்ளது.
அதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும், அவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானவருமாக மூவர் காயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
#SrilankaNews