நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் விகிதம்
தற்போது அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது தொற்றின் வேகம் வயது வித்தியாசமின்றி பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தோற்றால் சிறுவர்கள் பதிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், பெற்றோர் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்ட 50 க்கும் அதிகமான சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நாளாந்தம் 10 முதல் 15 சிறுவர்கள் கொரோனாத் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலை அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஆபத்திலிருந்து தவிர்த்துக்கொள்ள 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதேவேளை, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவாக பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment