தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் காலமாகியுள்ளார்.
இவர் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினரின் மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டவராவார்.
அரசுடனான சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுகளில் பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணமடைந்த நிலையில், வோசரணைகளைத் தொடர்ந்து இவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment