மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பாணந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, மதுபான நிலையத்தை நடத்திவந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, 57 வகையான மதுபான போத்தல்கள், 119 பியர் டின்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews

