download 4 1 14
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனியார் பேருந்து சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Share

தனியார் பேருந்து சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

வடக்கு மாகாண தனியார் பேருந்து சங்கமும் நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழில்  இன்றைய தினம் நடைபெற்ற
போதே அதன் உப தலைவர் எஸ் டி கே ராஜேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளைய தினம் ஹர்த்தாளுக்கு வட மாகாண தனியார் போக்குவரத்து சங்கம் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. இதற்கமைய வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் போக்குவரத்துக்கள் நாளை இடம் பெற மாட்டாது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாங்களும் முழுமையாக எதிர்க்கின்றோம் .
நாங்கள் ஏற்கனவே , பயங்கரவாத தடைச் சட்டத்தினால் வட மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தமிழர்களாகிய நாங்கள் பல இன்னல்களை அனுபவித்திருக்கின்றோம்.
ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு நாங்கள் எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.
வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை , அவர்களின் நடைமுறைகள் எமக்கு மிகவும் துன்பத்தை தருகின்றது.
ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பேருந்து உரிமையாளர்களை மையமாக வைத்து பல கோரிக்கைகளை முன்வைத்து எமது வாழ்வாதாரத்தை முற்று புள்ளி பெறஇவர்கள் செய்கிறார்கள்.
சாரதி நடத்துனர்களுக்கான அடையாள அட்டை, தொடர்பான விடயம்.   புதிதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை புதிதாக எடுத்துக் கொள்ளப்பட்ட அலுவலர்கள் உரிமையாளர்களுடன் சில முரண்பாடுகள் தொடர்பாக  , இந்த முரண்பாடுகளை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்றாள், தாங்கள் விசாரணை நடத்தி , அதற்குரிய தீர்வினை பெற்று தருவதாக பலமுறை கூறியிருக்கின்றார்கள் ஆனால் இதுவரை பெற்றுத் தரவில்லை.
எங்களால் கொடுக்கப்பட்ட இந்த ஒரு தீர்வும் சரியாக கிடைக்கவில்லை. ஆகவே இலங்கை பொருத்தவரை ஒன்பது மாகாணங்களில் வட மாகாணத்தில் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நடைமுறைகளால் ஐந்து மாவட்டத்தில் உள்ள உரிமையாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...