நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்வதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் இன்று சபையில் வலியுறுத்தினார்.
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். சிறந்த தலைமைத்துவம் வழங்கக்கூடிய – நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். புதிய அமைச்சரவை உருவாக வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதுவே இடைக்கால தீர்வாக அமையும்.
பதவி விலக ஜனாதிபதி மறுத்துவிட்டார். ஆட்சியை பொறுப்பேற்க எதிரணிகள் தயார் இல்லை. எனவே, பிரதமர் பதவி விலகுவதுதான் வழி.” -என்றும் ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
Leave a comment