நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வெதுப்பக உணவுகள், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்.
இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இவற்றின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிக்கப்படலாம் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது.
அதன்படி வெறும் தேநீர் 25 ரூபாவாகவும் பால் தேநீர் 60 ரூபாவாகவும் பனிஸ் ஒன்று 50 ரூபாவாகவும் ரோஸ் பான் ஒன்று 30 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என உணவக உரிமையாளர் சங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment