breadeee
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாணின் விலை ரூ. 200

Share

ஒரு இறாத்தல் பாணின் விலை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் 200 ரூபாயாக காணப்படுமென, வெதுப்பக உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

பாணின் நியாய விலையை தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் நேற்றும் இன்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினர், யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தினர், தனியார் வெதுப்பக உரிமையாளர்கள், பிரீமா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர், செரன்டிப் நிறுவன விநியோக பிரதிநிதி, மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தின் வெதுப்பக உற்பத்திகளுக்கு கிடைக்கும் மாவின் அளவு குறைவடைந்துள்ளதாகவும், கிடைக்கப்பெறும் மாவின் விலை தொடர்பாகவும், டீசல் விநியோகத்தின் நெருக்கடி தொடர்பாகவும், வெதுப்பக உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதில் வழங்கிய, பிரீமா நிறுவன மாவட்ட விநியோகத்தர், கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது 45% மான கோதுமை மா இறக்குமதியே மாவட்டத்துக்கு பிரீமா நிறுவனத்தால் கிடைப்பதாகவும், அவற்றில் 55% த்தினை வெதுப்பகங்களுக்கு பங்கீடு அடிப்படையில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெதுப்பக சங்கங்கள் இரண்டுக்கும், தனியார் விநியோகத்தர்களுக்கும் கோதுமை மா பகிரப்படும்போதும், மாறுபட்ட விலை சந்தையில் காணப்படுவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

அதனையடுத்து, வெதுப்பக சங்கங்களுக்கு 13,000 ரூபாய்க்கு மேற்படாத விலையில் மா வழங்க பிரீமா விநியோகத்தர் தரப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேலும் வெதுப்பக தேவைக்கான “மில் ரக” கோதுமை மாவினை தனியார் கடைகளுக்கு விற்பனை செய்யும் வெதுப்பகங்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, விநியோகம் செய்யப்படும் வெதுப்பகங்களின் விபரங்களும், அளவும் பிரீமா நிறுவனத்தினராலும், வெதுப்பக சங்கத்தினராலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட மக்களின் அடிப்படை உணவாகவும், அதிகமான மக்கள் நுகர்வு செய்யும் உணவாகவும் உள்ள பாணின் விலையை அதிகரிக்காமல் 1 இறாத்தல் பாண் – ரூபாய் 200/= என்ற அடிப்படையில் விற்பனை செய்ய வெதுப்பக உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.

இந்த நடைமுறைகளை சீராக முன்னெடுக்க, தற்காலிக பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் தலைமையில் விசேட ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், வெதுப்பக உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள சங்கங்களின் பிரதிநிதிகள், பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவன பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...