யாழ்ப்பாணத்தில் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,
யாழ்.மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது. மீறி அதிக விலைக்கு பாண் விற்கும் வெதுப்பக உரிமையாளர்களின் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
பிறீமா மா எமக்கு 12 ஆயிரத்து 500 ரூபாவிற்கு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. விலையில் எந்த வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. எனவே யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் 200 ரூபாய்க்கு பாண் விற்பனை செய்யப்படும் – என்கிறார்.
#SriLankaNews
Leave a comment