Provincial Council election 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தல் தடைப்பட வாய்ப்பு??

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது என்றும் ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது என்றும் ஆணைக்குழுவின் தலைவர்  சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மேலும், தான் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்றும் வதந்திகளுக்கு பதிலளிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவாவும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த அவர், தான் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் சாள்ஸ் விலகியமை குறித்து இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது எனவும் ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...