நாகவிகாரை அமைந்துள்ள இடம் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது- சீவிகே

CVK

நாகவிகாரை அமைந்துள்ள இடமானது, செட்டியார் சிவன் கோயில் என்று சொல்லக்கூடிய வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு உரித்தானது. அது அவர்களாலேயே தான் வழங்கப்பட்டது.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதை சிவன் கோயில் தர்மகர்த்தாவின் தந்தையார், கந்தப்பச் செட்டியார் அவரது காலத்தில் சட்ட வேலைகளைக் கையாண்டவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் எனது கூற்று சரியானது என்பது உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version